திண்டுக்கல் மாவட்டம்
இவ்வறிக்கை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திண்டுக்கல்லிருந்து பெறப்பட்டது.
பழனி வட்டத்தில், காலியாக உள்ள, 5 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பழனி வட்டத்தில் காலியாக உள்ள 5 கிராம உதவியாளர்கள் பணியிடத்திற்கு, பின்வரும் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த, தகுதிகளைகொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை பத்திரிக்கை விளம்பரம் வரப்பெற்ற நாளில் இருந்து, 15 தினங்களுக்குள் பழனி வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட பழனி வட்டாட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்வித்தகுதி, 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது 01.07.2022 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், பொதுபிரிவினருக்கு அதிகபட்சம் 32 ஆண்டுகள் மற்றும் இதர பிரிவினர்களுக்கு 37 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
காலியிட கிராமங்கள் விவரம் :
- 12 புதூர்
- தொப்பம்பட்டி
- தும்பலப்பட்டி
- அய்யம்பாளையம்
- தாளையூத்து
காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும் பொழுது :
- பணியிடம் காலியாக உள்ள கிராமத்தில் இருத்தல் வேண்டும்.
- அல்லது 2 கி.மீட்டர் சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவில் இருத்தல் வேண்டும்.
- மற்றும் தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள குறு வட்டத்தைச் சேர்ந்த குறு வட்ட அளவில் மட்டுமே தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.
விண்ணப்பதாரர் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் விண்ணப்பங்களை 15 தினங்களுக்குள் பழனி வட்டாட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என பழனி வட்டாட்சியர் திரு.ப.சசி அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
வ.எண் | கிராமம் | பதவி | ||
---|---|---|---|---|
1 | 12 புதூர் | கிராம உதவியாளர் | ||
2 | தொப்பம்பட்டி | |||
3 | தும்பலப்பட்டி | |||
4 | அய்யம்பாளையம் | |||
5 | தாளையூத்து |
Notification Link - https://dindigul.nic.in/palani-talukavillage-asst/