-->

Tamilnadu Government jobs in abroad

 Tamilnadu Government Jobs in Abroad

        
You have to wait 15 seconds.

        இவ்வறிக்கை, தமிழக அரசால் வெளியிடப்பட்டது.

        வெளிநாடுகளில், செவிலியர் பணிவாய்ப்பு.

  • இங்கிலாந்து
  • இங்கிலாந்து , ஜெர்மன்

        ஆகிய நாடுகளில் செவிலியராகப் பணிபுரிய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன மேலாண் இயக்குநர், மகேஸ்வரன் அறிவித்தார்.

        இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : இங்கிலாந்து நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிய ஐஇஎல்டிஎஸ் , ஓஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று , குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் பணி அனுபவம் பெற்ற, டிப்ளமா மற்றும், பட்டதாரி ஆண் , பெண் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர்.

        இவர்களுக்கு மாத ஊதியம் சுமார் ரூ2 லட்சம் வழங்கப்படும் . 

        மேலும் , ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு ஏ 1 , ஏ 2 , பி 1 நிலையில் ஜெர்மன் மொழி தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்ற, 42 வயதுக்குள்பட்ட டிப்ளமா மற்றும் பட்ட தாரி ஆண் , பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

        இவர்களுக்குத் தொடக்க நிலை மாத ஊதியமாக ரூ150000 வழங்கப்படும்.
பி 2 நிலையில் ஜெர்மன் மொழி தேர்ச்சி பெற்றவர்கள் செவிலியர்களாக பணியமர்த்தப்பட்டு , அவர்களுக்கு மாத ஊதியம் சுமார் ரூ2 லட்சம் முதல் ரூ2.5 லட்சம் வரை வழங்கப்படும்.


        எனவே , தகுதியுள்ளவர்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி , அனுபவம் , கடவுச்சீட்டு ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணி யில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omcresume@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஏப் .5 - ஆம் தேதிக் குள் அனுப்பி வைக்க வேண்டும்.


        மேலும் விவரங்களை www.omcmanpower.com என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம், மற்றும், 044 2250 5886 , 2250 0417 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என, கூறப்பட்டுள்ளது.